திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், பணம் பறிமுதல்!

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரொக்க பணத்தை ரயில்வே போலீசார் கைப்பற்றியுள்ளனர்.  திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட ஆணையர் டாக்டர் அபிஷேக், உதவி கோட்ட…

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரொக்க பணத்தை ரயில்வே போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட ஆணையர் டாக்டர் அபிஷேக், உதவி
கோட்ட ஆணையர் பிரமோத் நாயர், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார்
திருச்சி ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

சோதனையின் போது சென்னையில் இருந்து திருச்சி வழியாக மங்களூரு செல்லும் அதிவிரைவு ரயிலில் வந்த மதுரையை சேர்ந்த லட்சுமணன் என்ற பயணி ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணத்தை கொண்டு வந்தது தெரிய வந்தது.

அதனை ரயில்வே போலீசார் கைப்பற்றி தற்போது வணிக வரித்துறை அலுவலர்கள் தலைமையில் மதிப்பீடு செய்து வருகின்றனர். 15 லட்சம் ரொக்கம், ரூ. 2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இவைகள் ஹவாலா பணமா ? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொண்டுவரப்பட்டதா? என்ற கோணத்தில்  ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.