கோகுல்ராஜ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி யுவராஜ் கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், யுவராஜ் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 9 கைதிகளும் மதுரை மத்திய சிறையில் உள்ளனர் என மதுரை மத்திய சிறை துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.