ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பரிந்துரையின்படி, ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்த தயார் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என்றும், தேர்தல் ஆணையம் எப்போதும் வெளிப்படை தன்மையுடனேயே செயல்படுகிறது எனவும் தெரிவித்தார். வாரணாசியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக 2 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஒமைக்ரான் அலையில் தேர்தல் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தபோது, விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார். 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திற்கு சமம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள ”உங்கள் வேட்பாளரை அறியுங்கள்” என்ற செயலி ஒரு நல்ல தொடக்கம் எனக்கூறிய அவர், குற்ற பின்னணி கொண்ட வாக்காளர்கள் அறிந்து கொள்வதற்காக செயலி உருவாக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். மேலும், 5 மாநில தேர்தலில் போட்டியிடும் மொத்தமுள்ள 6 ஆயிரத்து 900 வேட்பாளர்களில் ஆயிரத்து 600 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்த அவர், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பரிந்துரையின்படி, ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்த தயார் என சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.