நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே லட்சியம்: மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே லட்சியம் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை மேற்கு கொத்தவால் சாவடி பகுதியில் புதிய நியாயவிலைக்கடை மற்றும் புதிய உடற்பயிற்சி கூடத்தினை அமைச்சர்…

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே லட்சியம் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை மேற்கு கொத்தவால் சாவடி பகுதியில் புதிய நியாயவிலைக்கடை மற்றும் புதிய உடற்பயிற்சி கூடத்தினை அமைச்சர் மா சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உக்கரைனில் இருந்து தமிழ்நாடு வந்த 1456 மாணவர்களுக்கு 20 மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 753 பேருக்கு தொடர்பு கொண்டதில் 375 மாணவர்கள் நேரடியாக உரையாற்றி உள்ளனர்.

போலந்து போன்ற நாடுகளில் படிப்பை தொடர மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர், இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த உள்ளோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே லட்சியம். இதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகள் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.