ஆயுதபடை பிரிவில் பணிபுரியும், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் இருவருக்கும் இடையே விடுமுறை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மறவன் குடியிருப்பு ஆயுதப்படை பிரிவில்
பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் இருவருக்கும் இடையே
விடுமுறை ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மறவன் குடியிருப்பு பகுதியில் ஆயுதப்படை மைதானம் உள்ளது. இங்கு ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு குடியிருப்புகள் உள்ளன. போலீசாருக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது. இன்னிலையில், வள்ளிச் செல்வி( 27) என்ற காவல் பெண் உதவி ஆய்வாளரிடம், சொர்ணவேணி (39) என்ற பெண் ஏட்டு தனது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் விடுப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார் .
ஆனால் விடுப்பு ஆளிக்க வள்ளிச் செல்வி மறுத்ததால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் தாக்கிகொண்டதில் ஏற்பட்ட காயத்தால் இருவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கு. பாலமுருகன்