சிவகங்கையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை! வியாபாரிகள் மகிழ்ச்சி!

திருப்புவனம் ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடியை தாண்டி ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ஆட்டுசந்தை நடைபெற்றது. இந்த…

திருப்புவனம் ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடியை தாண்டி ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ஆட்டுசந்தை நடைபெற்றது. இந்த ஆட்டுச்சந்தைக்கு
மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மேலூர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 3000 மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகை புரிந்தனர்.

10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரை விற்பனையானது. 10 கிலோ கொண்ட கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரை விற்பனையானது. சுமார்‌ 50,000 மேற்பட்ட‌ ஆடுகள் ரூ.1 கோடி தாண்டி விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

— சே‌.அறிவுச்செல்வன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.