இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டது.
சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அந்நாடுகளின் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதன்மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி மீதான அச்சம் குறைய வாய்ப்புள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டுக்கான ஒத்திகை நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த மாதம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக் கொண்டார். அவரது முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட முதல் நபர் என்ற பெருமையும் இவரையே சேரும்.