உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம்; தொழில்நுட்ப கோளாறு சரி செய்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்

உலகம் முழுவதும் தொழில்நுட்ப கோளாறு காரணாமா இன்ஸ்டாகிராம் முடங்கிய நிலையில் அதனை சரி செய்துவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.  சமூகவலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக்கிற்கு அடுத்தப்படியாக தற்போது அதிகளவில் இளைஞர்கள் பயன்படுத்தும் சமூகவலைதளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது.…

உலகம் முழுவதும் தொழில்நுட்ப கோளாறு காரணாமா இன்ஸ்டாகிராம் முடங்கிய நிலையில் அதனை சரி செய்துவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

சமூகவலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக்கிற்கு அடுத்தப்படியாக தற்போது அதிகளவில் இளைஞர்கள் பயன்படுத்தும் சமூகவலைதளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. இதில் இளைஞர்கள் தங்களது புகைபடங்கள், வீடியோக்கள், ரீல்கள் போன்றவற்றை பதிவிட்டு தங்களின் பெரும்பாலான நேரத்தை அதில் செலவிடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு இன்ஸ்டாகிராம் செயலி உலகளவில் முடங்கியது. இதனால் அதன் பயனாளர்கள் பலரும் நேற்றிரவிலிருந்து டிவிட்டர் போன்ற பிற சமூக வலைதளங்கள் மூலம் புகார் அளித்தனர். பயனர்கள் பலரும் தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தங்களுக்கு செய்தி வந்ததாக நேற்று புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதாக டிவிட்டரில் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் அறிவித்துள்ளது. மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் இன்ஸ்டாகிராம் நேற்று இன்ஸ்டாகிராம் செயலிழப்பை உறுதி செய்துள்ளது.

https://twitter.com/ANI/status/1587225884360314880?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1587225884360314880%7Ctwgr%5E513ac9c2cfaa0fb6a5da1cb9d116142c03be2269%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FWorld%2Finstagram-fixed-the-bug-that-triggered-hours-long-outage-826941

இதனிடையே, உலகளவில் ஏறத்தாழ 8 மணிநேரம் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாக அதன் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில், “உங்களில் சிலருக்கு உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு வருந்துகிறோம். உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை அணுகுவதில் சிக்கல் இருந்தது. சில இன்ஸ்டாகிராம் கணக்குகளில் தங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்காலிகமாக மாறுதல் அடைந்திருக்கலாம். தொழில்நுட்பக் கோளாறு தான் இதற்கு காரணம். அதை சரிசெய்துவிட்டோம்’ என்று அந்நிறுவனம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.