கிளாஸ்கோ மாநாடு, அமளியில் உடையும் குமிழியாகிவிடக்கூடாது: வைரமுத்து

பருவநிலை மாறுதல் குறித்த கிளாஸ்கோ மாநாடு, அமளியில் உடையும் குமிழியாகி விடக்கூடாது என கவிஞர் வைரமுத்து விமர்சித்துள்ளார். ஐநாவின் பருவநிலை மாறுதல் குறித்த மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 31ஆம் தேதி…

பருவநிலை மாறுதல் குறித்த கிளாஸ்கோ மாநாடு, அமளியில் உடையும் குமிழியாகி விடக்கூடாது என கவிஞர் வைரமுத்து விமர்சித்துள்ளார்.

ஐநாவின் பருவநிலை மாறுதல் குறித்த மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கிய மாநாடு வரும் 12ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, இங்கி லாந்து உள்ளிட்ட 120 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். பருவநிலை மாறுதல் குறித்த மாநாட்டில் பாரிஸ் ஒப்பந்தத்தை நடப்பில் கொண்டுவரும் நாடுகளுக்கு வழங்கப்பட்ட சலுகை என்ன என்று கவிஞர் வைரமுத்து, ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள் ளார்.

மேலும், ஒப்பந்தத்தை கிடப்பில் போடும் நாடுகளுக்கு கொடுக்கப்படும் நெருக்கடி என்ன என்றும் வினவியுள்ளார். இதனை இந்தியா முன்மொழிய வேண்டும் என்றும், உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.