தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகும் GKM தமிழ்குமரன்………!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் .

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும் வழக்கம். தற்போதுள்ள நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும் நிலையில் 2026-29 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல், இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . இதுவரை நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன் பெற்றுள்ளார்.

அதே போல பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.