முக்கியச் செய்திகள் இந்தியா

வீணாகும் காய் கனிகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயு!

ஹைதராபாத்தில் உள்ள பௌவன்பல்லி காய் கனி சந்தையில் வீணாக்கப்படும் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுவது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

ஹைதராபாத்தை மையமாக கொண்ட அகுஜா இஞ்சினியரிங் நிறுவனம் வீணான காய்கறி மற்றும் பழங்களிலிருந்து இயற்கை வாயு மற்றும் எரிவாயு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகளை வைத்துள்ளனனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ஹைதராபாத்தில், பௌவன்பல்லி பகுதியில் செயல்படும் காய் கனி சந்தையிலிருந்தே அதிக அளவில் இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது. இங்கு ஒரு நாளைக்கு 10,000 கிலோ காய் கனி கழிவுகள் சேகரிக்கப்பட்டு, இயற்கை எரிவாயு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் எரிவாயு மூலம் சந்தையில் உள்ள 120 மின் விளக்குகள், 170 கடையின் விளக்குகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளின் இயக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து சந்தையின் செயலர், சீனிவாஸ் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாக இக்கழிவுகளை கொண்டு மின்சாரம், இயற்கை எரிவாயு முதலானவை உற்பத்தி செய்துவருவதாக கூறினார். மேலும்சந்தையில் ஒரு நாளைக்கு 800 முதல் 900 யூனிட் வரையிலான மின்சாரம் தேவைப்படும் என்றும் ஆனால் தற்போது 80 சதவீதம் மின்சாரத்தை இக்கழிவுகள் மூலம் கிடைக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறித்து அகுஜா இஞ்சினியரிங் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பொறியியலாளர் முனைவர் கங்கானி கூறும்போது, வீணாகும் காய்கறி மற்றும் பழங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க கடந்த 2008ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டதாகவும் ஆனால் அங்கீகாரமுள்ள நிறுவனமாக 2011ம் ஆண்டே உருவெடுத்ததாகவும் கூறினார். மேலும் எதிர்காலத்தில் இன்னும் பல சந்தைகளுக்கு இந்த திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

Arivazhagan Chinnasamy

பெண்களிடம் ஆபாசமாக பேட்டி… யூடியூப் சேனல் குழுவினர் 3 பேர் கைது!

Saravana

தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அறிவிப்பு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

Gayathri Venkatesan

Leave a Reply