முக்கியச் செய்திகள் உலகம்

ரஷ்யாவிற்கு உதவும் எண்ணத்தை கைவிடுக – ஜி 7 நாடுகள் வலியுறுத்தல்

உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உட்பட எந்த வகையிலும் ரஷ்யாவிற்கு உதவ வேண்டாம் என சீனாவை ஜி 7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

 

ரஷ்யா, உக்ரைன் போரால் ஏழை நாடுகள் அச்சப்படுவதாக ஜி 7 நாடுகள் தெரிவித்துள்ளன. மேலும் உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை தூண்டுவதாகவும் எச்சரித்துள்ளது. உக்ரைனை விட்டு மருந்து மாத்திரைகள், தானியங்கள் உள்ளிட்டவைகள் வெளியேறுவதை ரஷ்யா தடுப்பதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை தேவை என்றும் ஜி 7 நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போரால் உணவு மற்றும் ஆற்றல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், மேலும், சர்வதேச தடைகளை குறைத்து மதிப்பிடுவது அல்லது உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உட்பட எந்த வகையிலும் ரஷியாவிற்கு உதவ வேண்டாம் என்று சீனாவை ஜி7 நாடுகள் கேட்டுக்கொண்டன. மேலும் இந்த போரால் உருக்குலைந்த உக்ரைனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை சீனா ஆதரிக்க வேண்டும் என்றும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரில் உதவ வேண்டாம் என்றும் ஜி 7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 3 பேர் கத்தியால் குத்தி கொலை

Saravana Kumar

முன்னணி கார்களுக்கான விருது வழங்கும் விழா: பரிந்துரைப்பட்டியல் வெளியீடு

Halley Karthik

பத்திரப்பதிவு துறையை சீரமைக்க ஆலோசனை; அமைச்சர் மூர்த்தி

Saravana Kumar