கர்நாடகா அருகே காதலன் சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் மனமுடைந்த காதலி விஷம் அருந்திஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிம் தும்கூரு அருகே உள்ள மஸ்க்கள் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ்.
இவர் பெங்களூருவில் துணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரும்
மஸ்க்கள் அருகே உள்ள ஆரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான சுஷ்மா என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். மேலும், இருவரும் உறவினர்கள் என்பதால் இரு குடும்பத்தினரும் இவர்கள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி தனுஷ் மஸ்க்கள் கிராமத்தில் நடந்த ஊர்
திருவிழாவில் கலந்துகொள்வதற்காக பெங்களூருவில் இருந்து தனது காரில் வந்து
கொண்டிருந்தார். பெங்களூருவுக்கு தும்கூரு தேசிய நெடுஞ்சாலை நிலமங்களா அருகே தனுஷ் தன் காரை ஓட்டிச் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சாலை விபத்தில் மரணமடைந்த தனுஷை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் தனுஷை கடந்த 2 வருடங்களாக காதலித்த சுஷ்மா தன் காதலன் இறந்த சோகத்தில் மனமுடைந்து வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மாத்திரை சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். உயிரிழப்பு செய்துகொண்ட சுஷ்மா கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அதில் காதலன் இறந்ததால் மனம் உடைந்துஉயிரை மாய்த்துக் கொள்வதாகவும் , தான் இந்த பிறகு தனுஷ் அருகே அடக்கம் செய்யுமாறும் அந்த கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். சுஷ்மாவின் கோரிக்கைப்படி உறவினர்கள் மஸ்கல் கிராமத்தில் தனுஷை அடக்கம் செய்த இடத்தின் அருகே சுஷ்மாவை அடக்கம் செய்தனர்.
காதலன் உயிரிழந்ததால் காதலி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.








