முக்கியச் செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் “குஷி”  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ‘குஷி’ திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

‘குஷி’ திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தோன்றுகின்றனர். இவர்கள் திரையில் நல்ல ஜோடியாக வலம் வருவார்கள் என்றும், இவர்களிடையே ஏற்படும் கெமிஸ்ட்ரி பார்வையாளர்களிடத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

‘குஷி’ உற்சாகமான.. வண்ணமயமான.. காதல் கதையாக இருக்கும் என்பதை முன்னணி ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இடையேயான தோற்றம் உறுதிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

‘குஷி’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

துப்பாக்கியை வைத்தபடி செல்ஃபி: குண்டு பாய்ந்து இளம்பெண் பரிதாப பலி

Gayathri Venkatesan

காணாமல் போன பெண், எலும்புக்கூடாக மீட்பு – விசாரணை

G SaravanaKumar

சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தம்

EZHILARASAN D