தகவல் பரிமாற்றத்துக்கு பெரிதும் உதவும் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டு வருகின்றன. வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் ஏதாவது ஒரு வலைதளத்தின் லிங்க்கை நாம் வைக்கும்போது, அந்த லிங்க்கில் இருக்கும் உள்ளடக்கம் முழுமையாகத் தெரியாது.
தற்போது, அந்த உள்ளடக்கம் குறித்து ப்ரிவியூ பார்க்க, புதிய வசதியை வாட்ஸ்அப் நிர்வாகம் அறிமுகம் செய்யவுள்ளது. இதன்மூலம், அந்தத் தகவலை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் அதுகுறித்த ப்ரிவியூவைப் பார்க்க முடியும்.
இந்தப் புதிய வசதி ஆப்பிள் ஐஓஎஸ் தளத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த வசதி விரைவில் கிடைக்கும். ஆண்ட்ராய்டில் செயல்படும் வாட்ஸ்அப்பில் ஏற்கனவே, ப்ரிவியூ ஆப்ஷன் உள்ளது. வலைதளத்தின் லிங்க்கை நாம் ஸ்டேட்டசில் பகிரும்போது பயனர்கள் ப்ரிவியூவில் பார்க்க முடியும்.
தற்போது அந்த வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் இன்னும் மேம்படுத்த உள்ளது. சமீபத்தில் சாட் எமோஜி வசதியை வாட்ஸ்அப் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இது பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பயனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பல புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிர்வாகம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.







