தனது அத்தையை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் அனுமதி கேட்டும் சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கத்தாரில் உள்ள ஹமத் விமானநிலையத்தில் சிறுமி ஒருவர் தனது அத்தையை வழியணுப்பி வைக்க சென்றுருக்கிறார். அவரது அத்தை தனது விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்பாக காத்திருப்பு அறைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் தனது அத்தையை பிரிய மனம் இல்லாத அச்சிறுமி, கடைசியாக ஒரு முறை பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அங்கிருக்கும் பாதுகாப்பு அதிகாரியிடம் அச்சிறுமி அத்தையை சென்று பார்க்கலாமா என்று அனுமதி கேட்கிறார். பாதுகாப்பு அதிகாரி அனுமதியளிக்கவே அச்சிறுமி தனது அத்தை நோக்கிச் சென்று கட்டியணைக்கிறார். இந்த வீடியோவை பார்க்கும்போது நமது மனம் உருகிவிடும் அளவிற்கு மனம் நெகிழ்ச்சியாக இருப்பதாக நெட்டீசன்கள் கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது. கோடிக் கணக்கில் லைக்குகளும் ஷேர்களும் குவிந்து வருகிறது.