முக்கியச் செய்திகள் தமிழகம்

விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: அதிமுக கண்டனம்

விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 48 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக அரசு, தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியைத் தேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது. அதிமுக பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில், நேற்று சென்னையிலும் மாநிலத்தின் மற்றப் பகுதிகளிலும் நடைபெற்ற உற்சாகமான விழாக்களை கண்டு மனம் பொறுக்க முடியாத திமுக, விடிந்தவுடன் காவல் துறையை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.

அதிமுக, ஆழம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம், இந்த இயக்கம் திமுகவின் முயற்சிகளால் முடங்கிவிடமோ, முடியாமற்போகவோ, ஓய்ந்து, சாயப்போவது இல்லை. எத்தனை கழக நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்குகள் போட்டாலும் அவதூறு பரப்பினாலும், அதிமுக எதிர்காலத்தில் அடையப் போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது”- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Jayapriya

பிப். 24ஆம் தேதி அதிமுகவினர் இல்லங்களில் விளக்கேற்ற கோரிக்கை!

Gayathri Venkatesan

கனடாவில் அவசர நிலை பிரகடனம் ரத்து

Halley Karthik