முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

கொலை வழக்கு: குர்மீத் ராம் ரஹிமுக்கு ஆயுள் தண்டனை

தேரா சச்சா சவுதா ஆசிரம மேலாளர் கொலை வழக்கில், அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இருந்தவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர் தனது ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த ஆசிரமத்தின் மேலாளராக இருந்தவர், ரஞ்சித் சிங். கடந்த 2002 ஆம் ஆண்டுல் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார் என்றும் ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்ற விவரங்கள் பத்திரிகைகளில் வெளியானது. ஆசிரமத்தில் இருந்தே செய்திகள் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்மீத் ராம் ரஹிம் நம்பினார். இந்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு மர்மநபர்களால் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. கடந்த 8 ஆம் தேதி பஞ்ச்குலா நீதிமன்றம் இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் மற்றும் 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இவர்களுக்கு என்ன தண்டனை என்பது பற்றி நீதிமன்றம் இன்று அறிவிப்பதாக கூறியிருந்தது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனையும் ரூ 31 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்?

Saravana Kumar

இந்தியாவில் 27,254 பேருக்கு கொரோனா பாதிப்பு

Ezhilarasan

டி.என்.பி.எல் 5வது சீசன் இன்று தொடக்கம்

Vandhana