முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலை உயர்வு

ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெய்யின் விலையும் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தி ஆவின் நிர்வாகம் நேற்று அறிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, பிரீமியம் நெய் அரை லிட்டர்- ரூ.365 (ரூ.340). நெய் அரை லிட்டர்- ரூ.305 (ரூ.285); நெய் 100 மி.லி. (பவுச்)- ரூ.70 (ரூ.65); நெய் 100 மி.லி. (ஜார்)- ரூ.75 (ரூ.70); நெய் 15 மி.லி. (பவுச்)- ரூ.14 (ரூ.12); நெய் 1 லிட்டர் (அட்டைப்பெட்டி)- ரூ.620 (ரூ.575); நெய் அரை லிட்டர் (அட்டைப்பெட்டி)- ரூ.310 (ரூ.280). நெய் 1 லிட்டர் (ஜார்)- ரூ.630 (ரூ.580); நெய் அரை லிட்டர் (ஜார்)- ரூ.315 (ரூ.290); நெய் 200 மிலி. (ஜார்)- ரூ.145 (ரூ.130); நெய் 5 லிட்டர் (ஜார்)- ரூ.3,250 (ரூ.2,900) என்று விலை உயர்த்தப்பட்டது.

கடந்த மார்ச் 4-ந் தேதி லிட்டருக்கு ரூ.20, கடந்த ஜூலை 21-ந் தேதி ரூ.45 என்ற அளவில் ஆவின் நெய்யின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது லிட்டருக்கு ரூ.50 என்ற அளவில் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நெய்விலையை தொடர்ந்து தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சமையல் பயன்பாட்டிற்கான உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் ரூ.52ல் இருந்து 55 ஆகவும், 500 கிராம் ரூ.250ல் இருந்து ரூ.260 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram