போனை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள்: செல்போனை கண்டுபிடித்தவர் கூறுகிறார்

செல்போன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள் என்று முதல் செல்போனைக் கண்டுபிடித்தவரான மார்ட்டின் கூப்பர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத உலகை நினைத்துக் கூட பார்க்க முடியாத…

செல்போன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள் என்று முதல் செல்போனைக் கண்டுபிடித்தவரான மார்ட்டின் கூப்பர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத உலகை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது. பணப் பரிவர்த்தனை முதல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது வரை ஸ்மார்ட்மூலம் செய்ய முடியும். ஸ்மார்ட்போன் இன்று மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கம் ஆகியிருக்கிறது.

இந்நிலையில், முதல் செல்போனைக் கண்டுபிடித்தவர் இவ்வாறு கூறியிருக்கிறார். உலகின் முதல் சென்போனை 1973ம் ஆண்டு கண்டுபிடித்தவர் மார்ட்டின் கூப்பர். இவருக்கு தற்போது 92 வயதாகிறது. இதுகுறித்து அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு “தினமும் 5 மணி நேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்களா? உண்மையில்  ஸ்மார்ட்போனை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள்? செல்போன் உள்ளிட்ட சாதனங்களை முடிந்தவரை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள்” என்றார்.

சிகாகோவைச் சேர்ந்த மார்ட்டின் கூப்பர் 1973ஆம் ஆண்டு மோட்டரோலா டைனாடிஏசி 8000எக்ஸ் என்ற உலகின் முதல் செல்போனை கண்டுபிடித்தார். மோட்டரோலா நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவந்த மார்ட்டின் கூப்பர். அப்போது கார் போன்கள் மட்டுமே பிரபலமாக இருந்து வந்ததைக் கண்டு சிந்திக்கத் தொடங்கினார்.

போனை கையில் எடுத்துக் கொண்டு செல்லும் வகையில் உருவாக்க வேண்டும் என்று அப்போது அவர் திட்டமிட்டார். அதைத் தொடர்ந்து அவர் செல்போனை உருவாக்கும் திட்டத்தை மோட்டரோலா நிறுவனத்திடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரது திட்டத்திற்கு மோட்டரோலா நிறுவனம் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்தது.

இவரது தலைமையிலான குழுவினர் 3 மாதங்களில் செல்போனை கண்டுபிடித்தனர். போலீஸ் ரெடியோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து இந்த செல்போனை அவர் உருவாக்கினார்.

தற்போது அது பல வடிவங்களில் செல்போன் உருமாற்றம் அடைந்து மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. செல்போன் இல்லாத வாழ்க்கையை இன்று வாழ்வது சாத்தியமா என்ன?

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.