முக்கியச் செய்திகள் தமிழகம்

பொதுக்குழு – முதல் தீர்மானத்தை முன்மொழிந்த ஓபிஎஸ்

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக்க வேண்டும் என்கிற தீர்மானம் அதிமுக பொதுக்குழுவில் முன்மொழியப்பட்டது.

பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஓருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு ஒரே மேடையில் இடம் ஒதுக்கப்பட்டு அமரவைக்கப்பட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஏற்கெனவே 23 தீர்மானங்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்தார். இதனால் புதிய தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அரங்கிற்கு வந்து சேர்ந்தது முதல் “ஐயா எடப்பாடியார் வாழ்க, ஒற்றைத் தலைமை வேண்டும்” என எடப்பாடி ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதேபோல ஓபிஎஸ் வெளியேற வேண்டும் என்றும் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்படியான சூழலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தனர். இதற்கிடையில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மண் உசேனை நிரந்தர அவைத்தலைவராக்க வேண்டும் என்கிற தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இதை முன்மொழிய வழிமொழிய ஓபிஎஸ்-ம், வழிமொழிய இபிஎஸ்-ம் அழைக்கப்பட்டனர். இதனையேற்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதிய மாணவர்கள்!

Jayapriya

”மக்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்”

Janani

சென்னை மாநகராட்சியில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

Saravana Kumar