ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தது தமிழக அரசு!

ஜெம் வீரமணியின் பாலியல் வழக்கை விசாரிக்க தமிழக அரசு 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.

பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக போடப்பட்ட வழக்கு பெரும் சர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடந்த பல ஆண்டுகளாக இதுபோன்று சிறுமிகளை பாலியவன்கொடுமை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி என்ற பெண்ணும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ஜெம் வீரமணியின் உதவியாளர் கணேசன் என இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் புகார் அளித்த போது முறையாக விசாரணை நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி எந்த தகவலையும் கண்டறிய முடியவில்லை என நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை அளித்த விசாரணை அதிகாரிகளான விபசார தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளராக இருந்த யாஸ்மின், ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கண்ணன், அருண் ஆகியோர் மீது நடவடிக்கை பாய்ந்தது. மேலும் அருண், யாஷ்மின் ஆகியோர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த வழக்கில் மேலும் பல பெரும் புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் 4 பேர் கொண்ட SIT என்கிற சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் சென்னை மத்திய குற்றப்புரிவு தேன்மொழி, காவல் இணை ஆணையாளர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் கீதாஞ்சலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.