‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 2-ம் பாகம் குறித்து அதிர்ச்சி அப்டேட் கொடுத்த கெளதம் வாசுதேவ் மேனன்!

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டினை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்…

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டினை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான  திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ரூ.85 கோடி வசூலித்தது.  இத்திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ளார்.  இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு 2’ குறித்து நேர்காணல் ஒன்றில் கெளதம் மேனன் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த நேர்காணலில் கௌதம் வாசுதேவ் மேனன், “வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை நானும், ஜெயமோகனும் உருவாக்கிவிட்டோம்.  ஆனால் சிம்புவுக்கும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் இடையில் பிரச்னை உள்ளது.  அவர்களின் பிரச்னை முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.