ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக சென்னை வந்தடைந்த சிஎஸ்கே அணி வீரர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தனர். ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 -ம் தேதி சேன்னை சேப்பாக்கத்தில் தொடங்கவுள்ளது.  ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தனர்.

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 -ம் தேதி சேன்னை சேப்பாக்கத்தில் தொடங்கவுள்ளது.  ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை எதிர்த்து விளையாடவுள்ளது.  போட்டி தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தனர்.

சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.  சென்னை அணி சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இது தொடர்பான காட்சிகளையும் சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

https://twitter.com/ChennaiIPL/status/1763808056927031593

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்போது வரவுள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை.  சமீபத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மகனின் இல்லத் திருமண நிழ்ச்சியில் மகேந்திர சிங் தோனி அவரது மனைவியுடன் கலந்து கொண்டார்.   இதனைத் தொடர்ந்து, அவர் விரைவில் சென்னைக்கு வருகை தந்து பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/ChennaiIPL/status/1763873600841621710

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.