‘ஈ’ படம் பாணியில் நடந்த நகை திருட்டு: ஒருவர் கைது

அம்மாவுக்கு அறுவை சீகிச்சை என கூறி போலி நகைகளை, தங்க நகைகளாக அடகுவைத்து ஏமாற்றிய நபரை புதுவண்ணாரப்பேட்டை போலிசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். தலைமறைவான இன்னொருவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ் சினிமாவில்…


அம்மாவுக்கு அறுவை சீகிச்சை என கூறி போலி நகைகளை, தங்க நகைகளாக அடகுவைத்து ஏமாற்றிய நபரை புதுவண்ணாரப்பேட்டை போலிசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். தலைமறைவான இன்னொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த ஈ படத்தில் கதாநாயகன் அடகு கடைக்கு சென்று கவரிங் நகையை தங்க நகை என ஏமாற்றி பணத்தை வாங்கி செல்வது போன்ற ஒரு சம்பவம் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரங்கேறியுள்ளது. வடசென்னை பகுதியான திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதுவண்ணாரப்பேட்டையில் 36 வயதான நரேஷ் என்பவர், அவரது பெயரிலேயே நரேஷ் ஜிவல்லர்ஸ் என்ற அடகு கடையை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி நரேஷ் வீட்டிற்கு சென்ற சமயத்தில் கடையில் வயதான அவரது தந்தை சஜ்ஜன் இருந்துள்ளார். இச்சமயத்தில் கடைக்கு பழக்கமான நபரான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்றுள்ளார்.

சுமார் 25 கிராம் நகையுடன் வந்த மணிகண்டன் தனது தாயை மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் அவருக்கு”அறுவை சிகிச்சை செய்வதற்காக உடனடியாக பணம் தேவைப்படுவதாகவும் கூறி” நகையை அடகு வைத்துள்ளார்.மணிகண்டன் கொடுத்த நகையை நரேஷின் தந்தை பரிசோதனை செய்யாமல், தெரிந்தவர் என்ற அடிப்படையில் சுமார் 92000 ருபாய் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் கடைக்கு வந்த நரேஷ் மணிகண்டன் கொடுத்துச் சென்ற நகையை பரிசோதனை செய்து பார்த்த போது நகையின் கொக்கி, பட்டை போன்ற இடங்களை தவிர்த்து மற்றவைகள் எல்லாம் போலி என்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக நரேஷ் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நரேஷின் புகாரை பெற்று கொண்ட போலிசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து நீதீமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மணிகண்டன் புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சோகன்லால் பாபுலால் ஜெயின் அடகு கடையிலும் இதே போன்று பொய் சொல்லி 92000 ருபாய்க்கு போலி நகையை அடகு வைத்து சென்றது தெரிய வந்தது. இந்த குற்ற சம்பத்தில் மணிகண்டனுக்கு துணையாக இருந்த அவரது நண்பரை போலிசார் தற்போது தேடிவருகின்றனர். அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி மணிகண்டன் பணத்தை ஆட்டையை போட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.