சிலிண்டர் விலை உயர்வு – மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிலிண்டர் விலையை…

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிலிண்டர் விலையை மத்திய அரசு 50 ரூபாய் உயர்த்தியது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, கட்டிமேடு கடைத் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கார்ல் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கண்டனக் குரலை எழுப்பினர்.

– சௌம்யா.மோ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.