கன்னியாகுமாரி மாவட்ட மலைப்பகுதியில் நோய் வாய்ப்பட்டு 2 ஆண்டுகளாக படுக்கையாக இருந்த பழங்குடி மாணவனுக்கு இல்லம் தேடி மருத்துவ உதவி செய்த சார் ஆட்சியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் குடும்பங்களாக வசித்து
வருகின்றனர். இவர்களின் படிப்பு,மருத்துவ தேவைக்கும், அத்தியாவசிய தேவைக்கும் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பேச்சிப்பாறை மற்றும் 25 கிமி தூரம் உள்ள குலசேகரம் போன்ற நகர பகுதிக்கு தான் வரவேண்டும், மலை பகுதிகளில் பால் வடிப்பு தொழில், மலை பயிர் விவசாயம் போன்ற தொழில்களை செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் இவர்கள் பெரும் நோய் வந்தால் அதற்கு சிகிச்சை பெற இயலாமலே உள்ளனர்.
இந்தநிலையில் தான் மோதிர மலை அருகே மூக்கரைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி இவரின் கணவர் ஏற்கனவே பலியான நிலையில் சாந்தி இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். மூத்த மகன் ஆனந்த்(23). 12 வகுப்பு படித்து கொண்டிருக்கும் போதே முதுகு தண்டு வட பிரட்ச்சினையால் நோய் வாய்ப்பட்டான். ஏற்கனவே 13 ஆண்டுகளாக இதே பிரட்சனையால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மகன் படுத்த படுக்கையானதால் செய்வது அறியாமல் திகைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கேரள மாநிலம் , தமிழகம் என பல மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்றும் பலனாளிக்காத நிலமையில் இறுதியில் பணம் இன்றி கோயம்புத்தூரில் சாந்தி தையல் கடையில் பணி புரிந்த வாறே அங்கு மகனுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். வேறு வழியின்றி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் அரவிந்த்
மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக் ஆகியோர் மலையோர பகுதியில்
வசிக்கும்பழங்குடி மக்களை சந்திக்க செல்லும் போது இந்த நோய் வாய்பட்ட ஆனந்தன் தகவல் கிடைத்தன.
இதை தொடர்ந்து சார் ஆட்சியர் கவுசிக் மறுதினம் நேரடியாக சென்று ஆனந்தை பார்வையிட்டு சிகிச்சை பெற்ற விபரங்களை கேட்டறிந்து Medical Report-ஐ வாங்கி சென்றார். தொடர்ந்து மறு நாள் மாணவனை ஆம்புலன்சில் நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு சிகிச்சை அளித்த பிறகு மகன் ஒரு வாரத்தில் நடக்க முயன்றார் என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் சாந்தி.
மேலும் இரு வருடங்கள் படிப்பு கேள்வி குறியாகி உள்ளதையும் உயர் படிப்பிற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார் சாந்தி. ஆனந்த் 12 ம் வகுப்பு முடிந்த நிலையில் என்னால் முழுமையாக நடக்க இயலவில்லை என்றும்
எல்லாம் படுக்கையில் தான் கழிந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டேன் என்று கூறிய
ஆனந்த் தற்போது நடக்கிறேன். இதற்கு காரணம் சார் ஆட்சியர் கவுசிக் அவர்கள் தான்
என்றும் அவர்களை வாழ்நாளில் மறக்க மாட்டேன் என ஆனந்த கண்ணீரில் கூறினார்.
அதே வேளையில் அதிகாரிகள் பழங்குடி மக்களை அடக்க நினைக்கும் இந்த காலத்தில்
எங்கள் காணி இன மக்களை பாதுகாக்கும் நோக்கில் வந்த அதிகாரிகளை நாங்கள் தற்போது தான் பார்க்கிறோம் என்றும் இறை தூதர் போல் வந்த சார் ஆட்சியரிடம் நான் வைத்த கோரிக்கையை உடனே நிறைவேற்றியது மட்டும் இன்றி இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி இலவச சிகிச்சை அளித்த நாகர்கோவில் ஜெய சேகரன் மருத்துவமனை நிர்வாகிகளை பெருமையோடு மாவட்ட காணி இன பழங்குடி மக்கள் பார்க்கிறோம். நன்றி கூறுகிறோம் என்கிறார்.
பழங்குடி பாரத தலைவர் சுரேஷ் காணி நான் மக்கள் பணியாற்றவே ஐ ஏ எஸ் படித்தேன் என்றும் முதலில் இங்கு சப் கலெக்டராக சேர்ந்த வாரத்தில் தான் இந்த ஆனந்த் தகவல் கிடைத்தன. அதன் பிறகு ஆனந்தை நேரில் சந்திக்கும் போது முதலில் கவலையடைந்தேன். தற்போது நடப்பான் என்ற தகவல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளன என்றும் பழங்குடி மக்களின் தேவையை இனியும் நிறைவேற்றுவேன் என தெரிவித்தார்.
உண்மையிலே அதிகாரிகள் மேலாதிக்க மன போக்குடன் நடந்து கொள்ளும் இந்த கால கட்டத்தில் சார் ஆட்சியர் கவுசிக்கின் செயல்பாட்டை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
-அனகா காளமேகன்