தீவிரமடையும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு – கேரளா விரையும் சிபிசிஐடி தனிப்படை

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு கேரளா தொடர்பாக விசாரணை மேற்கொள்ள  சிபிசிஐடி தனிப்படை போலீசார் கேரள செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில்…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு கேரளா தொடர்பாக விசாரணை மேற்கொள்ள  சிபிசிஐடி தனிப்படை போலீசார் கேரள செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு
சொந்தமான பங்களாவில் 2017-ம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பலால் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்ப்பட்ட முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தார். மற்ற
10-பேரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளனர்.

இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக உதகை நீதிமன்றத்தில் நடைப்பெற்று வரும்
நிலையில் தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி சிறப்பு பிரிவு போலீசார் விசாரித்து
வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் உட்ப்பட 40க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் விசாரித்துள்ளனர். மேலும் சில
முக்கிய நபர்களையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்கு
இரண்டு நாட்கள் முன் கேரள பதிவு எண் கொண்ட இரண்டு கார்களில் ஊட்டி, கோத்தகிரி, கொடநாடு போன்ற பகுதிகளுக்கு சென்று வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் கேரள பதிவு எண் கொண்ட இரண்டு சொகுசு கார்களின் உரிமையாளர்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கேரள செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.