விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் செய்யும் பணி தீவிரம்!

செங்கம் பகுதியில் விநாயகர் சிலை செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா முற்றிலும் ஒழிந்து…

செங்கம் பகுதியில் விநாயகர் சிலை செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில்
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா முற்றிலும் ஒழிந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தி கொண்டாடப்படும் பண்டிகை.

எனவே இந்த ஆண்டு விநாயகர் சிலைக்கு கடும் கிராக்கி ஏற்படும் என்பதால்
விநாயகர் சிலை ஐந்து அடி முதல் 15 அடி வரையில் மயில் விநாயகர், சிங்கமுக
விநாயகர், மும்பை விநாயகர் என புது உருவாக அதிக அளவு செய்து வருகின்றனர்.

அதே போன்று அரசு விதிகளுக்கு உட்பட்டு ரசாயனம் கலக்காத காகித கூழில்
தயாரிக்கப்பட்டு, தண்ணீரில் எளிய முறையில் கரையும் வகையில் இச்சிலைகள்
தயாரிக்கப்பட்டுள்ளதாக சிலை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், செங்கம் பகுதியில் தயாரிக்கப்படும் சிலைகள் உள்ளூர் மட்டும் அல்லாது
வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா ஆந்திரா பகுதிகளுக்கும்
ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறினர்.

கொரோனா காலத்தில் முற்றிலும் அழிந்த தொழில்களில் ஒன்றான விநாயகர் சிலை
தயாரிக்கும் தொழில் இந்தாண்டு புத்துயிர் பெற்றுள்ளதாகவும், இதனால் இந்த ஆண்டு விநாயகர் சிலை விற்பனை அதிக அளவு இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.