நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

நீட் தேர்வு பிரச்னையில் மத்திய அரசு அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “ஹிந்தியில் பெயர் வைக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆங்கிலத்தில் சட்டம் இருக்கும் போது ஆங்கிலத்தில்…

நீட் தேர்வு பிரச்னையில் மத்திய அரசு அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
“ஹிந்தியில் பெயர் வைக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆங்கிலத்தில் சட்டம் இருக்கும் போது ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்க வேண்டும். ஆங்கிலத்தில் தான் வரைவு சட்டம் தயார் செய்யப்படுகிறது. ஆங்கிலத்தில் எழுதி ஹிந்தியில் மொழிபெயர்க்கிறார்கள். நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் சட்ட மொழிபெயர்ப்பு  தான் பெரும் பகுதி பயன்படுத்தப்படுகிறது.
ஹிந்தியில் மொழிபெயர்ப்பு இருந்தால் இதற்கு ஆங்கிலத்தில் என்ன சொல் என்ன பிரிவு என்று நீதிபதிகளே கேட்கும் நிலை உள்ளது. ஆங்கிலத்தில் சட்டத்தை இயற்றிவிட்டு பெயர் மட்டும் ஹிந்தியில் வைக்கிறார்கள்.
நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்பது நியாயமே. திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் சரியானதே. தமிழ்நாட்டிற்கு  நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்பதற்கான  பல காரணங்களை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். மத்திய அரசு அசைந்து கொடுப்பது போன்று எனக்குத் தெரியவில்லை.
வருமான வரி தாக்கல் செய்யும் சதவீதம் கடந்த 9 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது என்றும் 2014 ஆம் ஆண்டு சராசரி வருமான வரி தாக்கல் செய்பவரின் வருமானம் 4.4லிருந்து 13 லட்சமாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது இது காட்டுகிறது என்று பிரதமர் நேற்று சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது குறித்து கேள்விக்கு, ஆண்டுக்கு ஆண்டு வருமான வரி தாக்கல் செய்பவர்களை எண்ணிக்கை  அதிகமாக தான் இருக்கும்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.