மீலாடி நபியை முன்னிட்டு மத நல்லிணக்க கந்தூரி விழா: 15,000 பேருக்கு அன்னதானம்!

மீலாடி நபியை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் திண்டுக்கல்லில் மும்மதத்தை சேர்ந்த 15,000 பேருக்கு உணவு வழங்கிய மாபெரும் கந்தூரி  விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மீலாடி நபியை முன்னிட்டு இல்லாதோருக்கு ஒரு…

மீலாடி நபியை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் திண்டுக்கல்லில் மும்மதத்தை சேர்ந்த 15,000 பேருக்கு உணவு வழங்கிய மாபெரும் கந்தூரி  விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மீலாடி நபியை முன்னிட்டு இல்லாதோருக்கு ஒரு வேளை உணவாவது வழங்கிட வேண்டும் என்பதற்காக  திண்டுக்கல் கரீபுன் நிவாஸ் நினைவாக ஐந்தாம் ஆண்டு மாபெரும் கந்தூரி விழா தனியார் திருமண மண்டபத்தின் வெகு விமரிசையாக நடைபெற்றது.

1500 கி அரிசி,  தக்காளி,  வெங்காயம் மற்றும் பல்வேறு மளிகை பொருட்கள் கலந்து 30க்கும் மேற்பட்ட ராட்சத அடுப்புகள் மூலம் பெரிய பாத்திரங்களை கொண்டு நெய் சாதம், கேசரி மற்றும் தால்சா தயார் செய்து திண்டுக்கல் பேகம்பூர், பூச்சி நாயக்கன்பட்டி,  ஹசநாத்புரம், மா.மு.பள்ளிவாசல்,  யூசுபியா நகர் மற்றும் பிஸ்மி நகர் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாயத்தை சேர்ந்த 15,000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் சாதம் பெற்றுச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.