அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மாநிலம் கலிபோர்னியாவில் 60 அடி உயரமுள்ள காந்தி சிலை நகரின் மத்திய பகுதியிலுள்ள பூங்காவில் அமைக்கப்பட்டிருந்தது. அச்சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இச்செயல் அங்கு வசிக்கும் இந்திய மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், இதற்கு காரணமானவர்கள், கூடிய விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.







