கல்வான் மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கான விருதுகள்!

கல்வான் மோதலில் வீரமரணமடைந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணைந்தனர். அவர்களது மரணம் நாடு முழுவதும்…

கல்வான் மோதலில் வீரமரணமடைந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணைந்தனர். அவர்களது மரணம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சீன தயாரிப்புகளுக்கு எதிரான குரல் அதிகம் ஒலிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் கல்வான் மோதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு குடியரசு தினத்தையொட்டி, விருதுகள் அறிவிக்கப்பட்டது.

நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. சீனாவுடனான மோதலில் உயிரிழந்த பீகார் ரெஜிமெண்டில் பணியாற்றிய கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு இரண்டாவது உயரிய விருதான மஹாவீர் சக்ரா அறிவிக்கப்பட்டது. மேலும் ஐந்து வீரர்களுக்கு வீர் சக்ரா விருதும், 14 சேனா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 1999ம் ஆண்டு கார்கில் போருக்கு பிறகு போர் சம்பந்தமான நடவடிக்கைகளை பாராட்டி வீரர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 1999ம் ஆண்டு 4 பரம்வீர் சக்ரா விருது மற்றும் 11 மஹாவீர் சக்ரா விருதுகள் கார்கில் போர் வீரர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வீர் சக்ரா விருதுகளில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் பழனி இடம்பிடித்துள்ளார். இவர் சீனாவுக்கு எதிரான கல்வான் மோதலில் போரிட்டு வீரமரணமடைந்தவர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply