நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?-மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால்

பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால் விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிபேட்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்…

பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிபேட்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார். மேலும், இந்நிகழ்வில் சமூகநலத்துறை மற்றும் மின்துறை அமைச்சர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சரோஜா, தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையென ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்னர்,தமிழகத்தில் முதல்வர் ஆட்சிக் காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்புகள் உள்ளன என்று கூறினார். இதுகுறித்து அவர் நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். மேலும் மக்களுக்கு எல்லா விதமான நலத்திட்டங்களையும் அதிமுக அரசு வழங்கி வருவதாகவும் அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply