டெல்லியில் ஜி20 மாநாட்டுக்காக மறுவடிவமைக்கப்பட்ட இந்திய வர்த்தக மேம்ம்பாட்டு அமைப்பின் அரங்கை பிரதமர் மோடி திறந்து வைத்து, அதை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதையொட்டி நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி-20 தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், டெல்லியில் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு(ஐடிபிஓ)வளாக திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ஜி-20 மாநாட்டுக்காக மறுவடிமைக்கப்பட்ட இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு அரங்கைத் திறந்து வைத்த பிரமர் நரேந்திர மோடி, அதற்காக நடத்தப்பட்ட சிறப்புப் பூஜையிலும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








