நிதியிருந்தால் போதாது, செயல்திறன் தேவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நிதியிருந்தால் போதாது, செயல்திறன் தேவை என பிரச்சாரத்தின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மதுரை ஆரப்பாளையத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை…

நிதியிருந்தால் போதாது, செயல்திறன் தேவை என பிரச்சாரத்தின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மதுரை ஆரப்பாளையத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டுகளாக ஊழல் ஆட்சி நடைபெற்று வந்தததாக குற்றம்சாட்டினார்.

தாம் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் 2 முறை தேர்தலில் வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்ததுடன் அதனால்தான் என்னால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்யமுடிந்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நிதி இருந்தால் போதாது, செயல் திறன் தேவை. சரியான கவுன்சிலர், சரியான மேயர் இருந்தால் மட்டுமே மாநகராட்சிகள் சிறப்பாக செயல்படும் என்று கூறியதுடன், கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.