முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் கர்நாடகா; எம்பி ஜோதிமணி

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

பெண்கள் அணிந்து வகுப்புக்கு வந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பூதாகாரமாக மாறிவருகிறது. தற்போது மாணவிகளுக்கு எதிராக மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வருவதுமாகப் பிரச்சனை பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்து ஹிஜாப் விவகாரம் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவர் கூறியதாவது,

“ஒரு மாணவருக்கு ஒரு பிரச்சனை என்றால் மொத்த மாணவ சமுதாயமும் இணைந்து நிற்பார்கள் .ஒரு பிரச்சனைக்கு மாணவர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி இருப்பதை நாம் முன்பு பார்த்திருப்போம். ஆனால் தற்போது கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் வருத்தமளிக்கிறது

ஒரு பெண்ணை சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் கோசத்தை எழுப்புகின்றனர், அதை எதிர்த்து அப்பெண் நிற்கிறாள். கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்த மாணவி ஒருவரை ஏராளமான மாணவர்கள் காவி துண்டு அணிந்து கொண்டு ஒன்றுகூடிச் சூழ்ந்து கோஷம் எழுப்பியது தவறானது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியை இந்த பிரச்சனைக்கு முழுக்க முழுக்க காரணம். என்ற அவர் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் தான் இதுபோன்ற வன்முறை ஏற்படுகிறது ” எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், முஸ்லிம் மாணவி சூழ்ந்து எதிராக கோஷங்கள் எழுப்பி கலாட்டாவில் ஈடுபட்டவர்களில் 90% மாணவர்கள் அல்ல வெளியிலிருந்து வரவழைக்கப்பட்டவர்கள். பெண்கள் எந்த உடையை அணிய வேண்டும் என அவர்கள் மட்டும் தான் முடிவு செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை நேரடியாக எதிர்க்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக நிற்பது மட்டும் தான் தேசப்பற்று, நேற்றைய தினம் முஸ்லிம் மாணவியை ஒன்று சேர்ந்து ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பியவர்கள் இந்துக்கள் இல்லை. இந்துத்துவா வாதிகள் இந்தியா மதச்சார்பற்ற நாடு பெண்களுக்கு பாதுகாப்பு மிக்க நாடாகும். கடந்த 70 ஆண்டுகளாகப் பாதுகாப்பு உடைய நாடாக இந்தியாவைக் காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.

இந்தியாவில் இருக்கக்கூடிய 80 சதவீதத்திற்கும் அதிகமான கல்லூரிகள் கிருத்துவ மதத்தினரால் நடத்தப்படுகிறது. அந்த கல்வி நிறுவனத்துக்கு எதிராக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எதிரான பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகக் கர்நாடகா உருவாகி வருகிறது என்று தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட நபரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயமடைந்த சோகம்

EZHILARASAN D

ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்; வருத்தம் தெரிவித்த விக்ரம்!

Arivazhagan Chinnasamy

பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாம்; ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளு முள்ளு

G SaravanaKumar