அரசுப் பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்குவதற்காக ரூ. 27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 கல்வி ஆண்டுக்கான ஊதியம் வழங்க ரூ.91.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.