இலங்கையில் முழு ஊரடங்கு அமல்

இலங்கையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சுற்றுலாத்துறையை மட்டும் நம்பி உள்ள இலங்கை  கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், அங்கு அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, பருப்பு,…

இலங்கையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

சுற்றுலாத்துறையை மட்டும் நம்பி உள்ள இலங்கை  கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், அங்கு அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, பருப்பு, சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால், அந்நாட்டு மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.

எதிர்கட்சிகள் இந்த விலை உயர்வை கண்டித்து நேற்று முன்தினம் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெரும் வன்முறை ஏற்பட்டதை அடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இலங்கை முழுவதும் வன்முறை சம்பவங்கள் நீடித்து வருவதை அடுத்து அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.