முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஜோஸ் பட்லர் சதம்; மும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்

மும்பை அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. 

நடப்பு அண்டுக்கான இன்றைய ஐபிஎல் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். வந்த வேகத்திலேயே ஜெய்ஸ்வால் 1 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரையடுத்து வந்த படிக்கல்லும் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர்களை அடுத்து வந்த ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மறுமுனையில் ஜோஸ் பட்லர் மும்பை அணியின் பந்து வீச்சை மைதானத்தின் நாளா புறமும் சிதறடித்து வந்தார். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் 30 ரன்னில் வெளியேற அடுத்து வந்த ஹெட்மயர் 35 ரன்னில் அவுட்டானார். பின்னர் வந்த வீரர்கள் சொற ரன்களில் வெளியேற ஜோஸ் பட்லர் 68 பந்துகளில் சதமடித்து 18.5 ஓவரில் அவுட்டானார். ஆட்டத்தின் இறுதியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழந்து 193 ரன்கள் குவித்தது.

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை அணியின் இஷான் கிஷன் மற்றும் அணி கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். வந்த வேகத்தில் ரோகித் சர்மா 10 மற்றும் அன்மோல்பிரீத் சிங் 5 ரன்னிலும் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். பின்னர் வந்த திலக் வர்மா, இஷான் கிஷன் இணைந்து அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். அதில் இஷான் கிஷன் 54 ரன்னில் வெளியேற, அவரையடுத்து திலக் வர்மா 61 ரன்னில் அவுட்டாகினர். பின்னர் வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டும் எடுத்தது.

இதனால், ராஜஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்று பெற்றதால் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி முதலிடத்தை பிடித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காதலியை காண மணப்பெண்போல் வேடம் அணிந்த காதலுனுக்கு அடி உதை!

G SaravanaKumar

கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவு!

Halley Karthik

ஜெய்பீம் படத்தை மிஞ்சிய சம்பவம்- விசாரணை கைதி மரணத்தில் திடுக்கிடும் தகவல்

EZHILARASAN D