ஜவ்வாது மலையில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு பக்தர்கள் சென்ற மின் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு மலையில் சேம்பரை என்ற
பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், புதூர் நாடு புலியூர் பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மக்கள் மினி வேன் ஒன்றில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணித்த ஏழு பெண்கள் உட்பட11 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திலிருந்து காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, ஜவ்வாது மலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Advertisement: