செய்திகள்

புகுஷிமா அணுக்கதிர் கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலந்துவிட ஜப்பான் அரசு முடிவு!

புகுஷிமா அணுக்கதிர் கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலந்துவிட ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.

ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு புகுஷிமா உலையில் ஏற்பட்டு கடுமையான சேதத்தினை விளைவித்தது. அணு உலை விபத்தின் போதும் அதன் பிறகும் அதன் வெப்பத்தையும் கதிர்வீச்சையும் குறைப்பதற்காக லட்சக்கணக்கான டன் தண்ணீர் பன்படுத்தப்பட்டது. அதில், குறைவான கதீர்வீச்சு கொண்ட நீர் பசிபிக் பெருங்கடலுக்குள் சென்றது. அதிக கதீர்வீச்சு கொண்ட தண்ணீர் அணுவுலை வளாகத்திலேயே தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டது. அப்படியாக இதுவரை 10 லட்சம் டன் தண்ணீர் அந்த வளாகத்தில் இருக்கிறது.


தண்ணீரை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த ஜப்பான் அரசு இப்போது அதை பசிபிக் பெருங்கடலில் கலப்பது என்ற முடிவை எடுத்துள்ளது. சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரில் உள்ள அதிகளவு கதிர்வீச்சு அகற்றப்பட்ட பிறகே கடலுக்குள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இருந்தாலும் அதிலுள்ள ட்ரிட்டியத்தை முழுமையாக அகற்றுதற்கான தொழில்நுட்பம் உலகத்திடம் இல்லை. உடனடியாக இதை செய்யப்போவதில்லை என்றும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாகும் என ஜப்பானிய அரசு அறிவித்திருந்தாலும் இந்த அறிவிப்பு கடலோர நாடுகளை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே “பசிபிக் பெருங்கடல் செத்துவிட்டது, நாங்கள் பார்த்த சார்டைன்கள், ஒங்கில்களை பாரக்கமுடியவில்லை” என கடலில் பயணம் செல்லும் மாலுமிகள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் ஜப்பானிய அரசின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement:

Related posts

வேட்பாளரின் செலவுக் கணக்குகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

Jeba

6, 7 மற்றும் 8-ம் வகுப்புக்கும் 50% அளவுக்கு பாடத்திட்டம் குறைப்பு!

Niruban Chakkaaravarthi

அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வருகிறார் சசிகலா

Nandhakumar