முக்கியச் செய்திகள் இந்தியா

நாட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை; மத்திய அரசு விளக்கம்!

நாட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த வாரம் முதல் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், இதுவரை அனைத்து மாநிலங்களுக்கும் 13 கோடியே 10 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுவதாகவும், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

மாநில அரசுகள் சரியான திட்டமிடுதலுடன் தடுப்பூசியை பயன்படுத்தினால், பற்றாக்குறை இருக்காது எனவும் கொரோனா தடுப்பூசி போடுவதில் வீணடிக்காத மாநிலமாக கேரள அரசு திகழ்வதாகவும், இதர மாநிலங்கள் 8 முதல் 9 சதவீதம் வரை தடுப்பூசியை வீணடிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார். ஏப்ரல் மாத இறுதிக்குள் மேலும் 2 கோடியே ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டு விடும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் அழைப்பு

Jeba

”அதிமுக, வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து வெற்றி பெறும்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: பிரகாஷ் ஜவடேகர்

எல்.ரேணுகாதேவி