முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை; தமிழிசை

கொரோனா சிகிச்சை மருந்தை, கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, தெலங்கானாவில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை விமானம் மூலம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு வரவழைத்தார். இந்த தடுப்பு மருந்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ரெம்டெசிவர் மருந்தை கொண்டு வர தெலங்கானா அரசு ஒத்துழைப்பு வழங்கியது. ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement:

Related posts

கோயம்பேடு சந்தையில் நாளை சில்லறை விற்பனைக்கு தடை: வியாபாரிகள் போராட்டம்!

தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது : மத்திய அரசு!

Karthick

ட்விட்டர் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Niruban Chakkaaravarthi