கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பழங்கள்!

உடல் உஷ்ணத்தை குறைக்கவும் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும் கோடைப் பழங்களை பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை…

உடல் உஷ்ணத்தை குறைக்கவும் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும் கோடைப் பழங்களை பற்றி பார்க்கலாம்.

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.  கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது.

அதன்படி, உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  அந்த வகையில்,  உடல் உஷ்ணத்தை குறைக்கவும் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும் கோடைப் பழங்களை பற்றி பார்க்கலாம்.

கிர்ணி 

கிர்ணி பழம் கோடை காலத்திற்கு ஏற்றது.  இந்தப் பழத்தில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளதோடு வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், மாக்னீசியம் ஆகியவைவும் உள்ளது.  பல ஊட்டச்சத்துகளும், மருத்துவ குணங்களும் நிறைந்த கிர்ணி பழத்தை ஜூஸாக செய்தும் அருந்தலாம்.

பப்பாளி 

பப்பாளி பழத்தில் அதிகமாக நீர்ச்சத்து உள்ளது.  பப்பாளியில் பாப்பைன் எனும் செரிமானத்தை தூண்டும் என்சைம் உள்ளது.  இந்த என்சைம் நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள புரோட்டீன்களை உடைத்து செரிமான செயல்பாடுகளை துரிதமாக்குகிறது. மேலும், பப்பாய்ன் மற்றும் சைமோபப்பாய்ன் என்ற நொதிகள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது.

மாம்பழம்

மாம்பழத்தில் ஆரோக்கிய கலோரிகள், நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகளவில் உள்ளது.  மாம்பழம் நாள்பட்ட நோய்கள் வருவதை தடுக்கிறது.  மேலும் இது செல் பாதிப்பை தடுத்து,  இளமையான தோற்றத்தை தருகிறது.

லிச்சி 

லிச்சியில் உள்ள ஃபெனோலிக் என்னும் பண்பு இரத்த அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகை செய்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலின் அடர்த்தியை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது.

அன்னாசி 

அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஏ பி1, வைட்டமின் ஏ பி2, வைட்டமின் ஏ பி3, வைட்டமின் ஏ பி6, துத்தநாகம், மாக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துகள் உள்ளது.  மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது.  இதனால் இது எடையை குறைக்க உதவுகிறது.  உங்கள் பசியை கட்டுப்படுத்தவும், அதிகப்படியான உணவுகள் எடுத்து கொள்வதை தவிர்க்கவும் உதவுகிறது.

கிவி 

கோடை கலத்தில் அதிகமாக வியர்ப்பதால் நம் உடலில் உள்ள தாதுக்கள் வியர்வை வழியாக வெளியேறிவிடும்.  இதனை ஈடுகட்ட கிவி பழம் உதவியாக இருக்கும்.  மேலும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.  கிவி பழம் மன அழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்தை வரவழைப்பதற்கும் உதவியாக இருக்கிறது.

கொய்யா 

கொய்யா பழத்தில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் கரோடின் போன்ற சத்துகள் உள்ளது. மேலும் இது இருமலை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.  இது எடை இழப்புக்கும் உதவுகிறது.

ஆப்ரிகாட் 

ஆப்ரிகாட் பழத்தில் நம் கண் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவும் பீட்டா கரோடின் அதிகளவில் உள்ளது.

தர்பூசணி

அதிக அளவு நீர்ச்சத்தும்,  மிகுந்த சுவையுடனும் இருக்கும் தர்பூசணி நம் உடலை போதுமான அளவு நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.  அதனுடன் நம் உடலுக்கு குளிர்ச்சியும் அளிக்கிறது.  தர்பூசணியில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  தர்பூசணியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஸ்டார் பழம்

ஸ்டார் பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது.  இப்பழம் கண்களை இதமாக்கி தலைவலியை போக்குகிறது.

ப்ளம்ஸ் 

ப்ளம்ஸில் கரோடினாய்டு மற்றும் பீனோலிக் ஆசிட் போன்ற பயோ ஆக்டிவ் கலவைகள் உள்ளது.  இது ரத்த சர்க்கரை அளவை குறைத்து, எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்துவதுடன்,  நியாபக சக்தியையும் மேம்படுத்துகிறது.

ஸ்ட்ராபெர்ரி 

கோடை காலத்தில் வரும் சருமப் பிரச்சனைகளிலிருந்து ஸ்ட்ராபெர்ரி நம்மை பாதுகாக்கிறது.  மேலும் இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும், உடலில் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது.

வில்வ பழம் 

வில்வ பழம் மிகவும் குளிர்ச்சி நிறைந்தது.  இந்தப் பழத்தில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் அதிகளவில் உள்ளதோடு நம் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.

அத்திப்பழம்

கோடையில் நம் உடலில் அடிக்கடி நீர்சத்து குறைந்து போவதை தடுக்கிறது.  மேலும், உடலுக்கு பொட்டாசியம், கால்சியம் மற்றும் மாக்னீசியம் சத்தை தருகிறது.  இயற்கையாக சர்க்கரை நிறம்பியுள்ள அத்திப்பழம் நமக்கு உடனடியான ஆற்றலை தருகிறது.

பீச் பழம்

கோடை வெயிலில் நம் உடலில் வெளியேறும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை திரும்பவும் கிடைக்க பீச் பழம் உதவுகிறது.  இந்தப் பழம் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

திராட்சை

திராட்சையில் ஆண்டி ஆக்ஸிடெண்ட்டும் பாலிபீனாலும் நிறைந்துள்ளது.  இது நம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.  மேலும் இது மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு மிகவும் நல்லது.

ஆரஞ்சு 

ஆரஞ்சு பழத்தில் 80 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.   மேலும் கோடை வெப்பத்திலிருந்து  பாதுகாக்கிறது.  மேலும் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.