இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது ‘ராயன்’ படத்தின் ‘அடங்காத அசுரன்’ பாடல்!

தனுஷ் எழுதி இயக்கும்  ‘ராயன்’ படத்தின் முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.   தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது திரைப்படம் ராயன். இந்த…

தனுஷ் எழுதி இயக்கும்  ‘ராயன்’ படத்தின் முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  

தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது திரைப்படம் ராயன். இந்த படத்தை அவரே இயக்கி, நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூரியா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் போஸ்டர் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த படம் தொடர்பாக புதிய அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இந்த படத்தின் முதல் பாடல் நாளை (மே 9) வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.

https://twitter.com/dhanushkraja/status/1788445027020190101?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1788445027020190101%7Ctwgr%5E86fa1f86dc5352c0980843914f275dd53cd2f99c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2024%2FMay%2F09%2Fraayan-first-song

இந்த நிலையில், ‘அடங்காத அசுரன்’ என்ற இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.