Skip to content
January 01, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » from guards to dgp comes a new logo
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

காவலர்கள் முதல் டிஜிபி வரை… வருகிறது புதிய லோகோ!

தமிழ்நாடு காவல் துறை டிஜிபி முதல், கீழ்நிலை காவலர்கள் வரை அணியும் சீருடையில் புதிய லோகோ வரும் 31ம் தேதி முதல் அணியும் பெருமையை அடையவுள்ளனர். தமிழக காவல்துறை 1305 சட்டம் ஒழுங்கு காவல்…

Author Avatar

G SaravanaKumar

July 27, 20224:45 pm TamilNaduTN PoliceUniform Logo

தமிழ்நாடு காவல் துறை டிஜிபி முதல், கீழ்நிலை காவலர்கள் வரை அணியும் சீருடையில் புதிய லோகோ வரும் 31ம் தேதி முதல் அணியும் பெருமையை அடையவுள்ளனர்.

தமிழக காவல்துறை 1305 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 202 அனைத்து மகிளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து புலானய்வு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், மற்றும் 27 புறக்காவல் நிலையங்கள் என மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 942 காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். இதில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 23 ஆயிரத்தி 542 பெண் காவலர்கள் பணியாற்றுவது சிறப்பம்சம்.

தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு முதல், கடைநிலை காவலர்கள் வரை தாங்கள் அணியும் சீருடையில் ஒரே மாதிரியான லோகோ அணிந்து வருகின்றனர். காவல் துறையை பொருத்தவரை அவர்களின் பதிவிகளுக்கு ஏற்ப தொப்பி முதல் காலணிகள் வரை மாறுபட்டிருக்கும் ஆனால் அவர்கள் அணிந்திருக்கும் லோகோ ஒரே மாதிரியாக இருக்கும். இந்த லோகோ மற்றும் சீருடைகளில் மாற்றம் செய்ய வேண்டுமென 10 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது.

குறிப்பாக பெண்காவலர்கள் அணிந்திருக்கும் சீருடை அசௌகரியமாக இருப்பதால், சீருடை அமைப்பில் மாற்றம் வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. ஆனால் இந்த கோரிக்கை தற்போது வரை பரிசீலனையிலேயே உள்ளது. வரும் 31ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடக்கும் போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது, புதிய லோகோ அறிமுகம் செய்யப்படவுள்ளது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இந்த விழாவில் கலந்து கொண்டு புதிய லோகோவை அறிமுகம் செய்யவிருப்பது தமிழக காவல் துறைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றே கூறலாம்.

புதிய லோகோவை வடிவமைக்கும் பணியை, நவீன மயமாக்கல் பிரிவு கூடுதல் டிஜிபி சஞ்சை குமாரிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களாகவே, 100க்கும் மேற்பட்ட லோகோக்கள் வடிவமைக்கப்பட்டு தற்போது புதிய லோகோ இறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் தயாராகும் இந்த லோகோவை வரும் 31ம் தேதியன்று குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிமுகம் செய்து முதல்வர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஒப்படைத்த பிறகு அன்று மாலை முதலே இந்த புதிய லோகோவை போலீசார் பயன்படுத்தலாமனெ கூடுதல் டிஜிபி சஞ்சைகுமார் தெரிவித்தார். இதே காவலர்களின் சீருடையிலும் குறிப்பாக பெண் காவலர் சீருடையில் மாற்றம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போல, தமிழக காவல்துறையை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதியின் சிறப்பு கொடியியையும், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கவுள்ளார். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 10 மாநில போலீசாருக்கு மட்டுமே இந்த கொடி வழங்கப்பட்டுள்ளது. இநத கொடியை கடந்த 2009ம் ஆண்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் 13 ஆண்டுகளாக இந்த கொடி தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட இல்லை. இந்த கொடி, வரும் 31ம் தேதி வழங்கப்பட உள்ளது. இது தமிழக காவல் துறையினருக்கு கிடைக்கும் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

BYE BYE 2025… 2026 புத்தாண்டை வரவேற்ற உலக நாடுகள்…!

By Web Editor December 31, 2025

தவெகவில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் நியமனம் ; விஜய்…!

By Web Editor December 31, 2025

தேர்தல் 2026 ; விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசம் நீட்டிப்பு – தமிழ் நாடு காங்கிரஸ்

By Web Editor December 31, 2025

தமிழ்நாட்டு மக்கள் உயிர் பயத்தில் வாழ வேண்டுமா..? – எடப்பாடி பழனிசாமி…!

By Web Editor December 31, 2025
#ट्रेंडिंग हैशटैग:TamilNaduTN PoliceUniform Logo

Post navigation

Previous Previous post: பசு, எருது, கன்று இறைச்சிகள் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு
Next Next post: இடம் மாறும் கோயம்பேடு பேருந்து நிலையம் – ஏற்பாடுகள் என்ன?
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading