வாழை முதல் லாந்தர் வரை… ஒரே நாளில் OTT -ல் வெளியாகும் திரைப்படங்கள்!

நாளை (11.10.2024)ஒரே நாளில் 5 திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது. திரையரங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் ரசிகர்களை போலவே, ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை காண தனி ரசிகர்கள் உள்ளனர். ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள…

நாளை (11.10.2024)ஒரே நாளில் 5 திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

திரையரங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் ரசிகர்களை போலவே, ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை காண தனி ரசிகர்கள் உள்ளனர். ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதே போன்று வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் என ஓடிடியில் வெளியாகிறது. அந்த வகையில் நாளை ஒரே நாளில் 5 திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதன்படி, நாளை எந்தெந்த திரைப்படங்கள், எந்தெந்த ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.

வாழை

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான வாழை திரைப்படம், நாளை (அக்.11) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

ரெபெல்

ஜிவி பிரகாஷ் குமார் நடித்து வெளியான ரிபெல் படம், சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் நாளை(அக். 11) வெளியாகிறது.

லாந்தர்

விதார்த் நடிப்பில் வெளியான லாந்தர் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை (அக். 11) வெளியாக உள்ளது.

சபரி

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான சபரி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை (அக். 11) வெளியாகிறது.

படிக்காத பக்கங்கள்

யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவான படிக்காத பக்கங்கள் திரைப்படத்தை சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் நாளை முதல் (அக். 11) காணலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.