ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படம் வரும் 17ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முதலாக தமிழில் ஹீரோவாக ’பிரண்ட்ஷிப்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார். படத்தை ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ளார். படத்திற்கு டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், மற்றும் லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமான லாஸ்லியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு தணிக்கையில் யூ/ஏ சான்றிதல் கிடைத்துள்ளது. படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படம் செப்டம்பர் 17ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.
இதுகுறித்து ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ”நாங்க வரோம்!!! உங்க ஆதரவோட உங்கள மகிழ்விக்கணும் என்ற எண்ணத்தோட “செப்டம்பர் 17” நம்ம படம் உலகம் முழுக்க தியேட்டர் ரிலீஸ்!! #சூப்பர்ஸ்டார், #தல, #தளபதி படம் மாதிரி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருக்கும் என பதிவிட்டுள்ளார். முன்னதாக ஹர்பஜன் சிங் திருவள்ளுவர் கன்சல்டன்சி சர்வீஸ் எனும் வெப் சீரிஸில் திருவள்ளுவர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







