பிரான்ஸ் அதிபரின் செல்போனும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் செல்போன், பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் தொலைபேசியை கண்காணித்து…

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் செல்போன், பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் தொலைபேசியை கண்காணித்து வருகின்றனர் என சர்வதேச தொண்டு நிறுவனமான அம்னேஸ்டி நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

அதனால் இந்த விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு வெளிநாட்டு உள்ள பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் போன்களும் கண்காணிக்க படுவதாகக் கூறப்படுகிறது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் செல்போனும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில், பிரான்சின் அரசியல்வாதிகளின் செல்போனும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ஊடகத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரும் வணிகர்களின் தொலைபேசி தகவல்களை கண்காணிக்கவும் பெகாசஸ் செயலி பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.